• img
  • மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் பைகள் (Bags), தொலைபேசி மற்றும் இதர உடைமைகளை நுழைவாயிலில் உள்ள கேபின் (Cabin) உள்ளே வைக்க வேண்டும்.

  • img
  • தனிப்பட்ட பிரதிகள், அச்சிடப்பட்ட பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை கவுண்டரில் வைத்துவிட வேண்டும்.

  • img
  • நூலகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் பதிவேட்டில் (Gate Entry Register) நூலகத்திற்கு வரும் வாசகர்கள் பெயர் மற்றும் முகவரிகளை தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும்.

  • img
  • நூலகத்தில் முழுமையான அமைதி காக்கப்பட வேண்டும். அரசியல் விவாதங்கள் கூடாது.

  • img
  • வாசகர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் கவுண்டரை விட்டு வெளியேறும் முன் கொடுக்கப்பட்ட புத்தகங்களை நல்ல நிலையில் உள்ளனவா என்பதைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • img
  • ஆய்வுக்காக வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது நிறுவனத்தில் அத்தாட்சி சான்றிதழ் (Bonafide Certificate) பெற்று வரவேண்டும்.

  • img
  • பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சிக்கான நூலக உறுப்பினர் கட்டணத்தை செலுத்தி தங்களை உறுப்பினராக்கிக் கொள்ள வேண்டும்.

  • img
  • ஆய்வுக்கான நூலக உறுப்பினர் கட்டணம் ஆய்வு முடிந்த பிறகு திரும்ப வழங்கப்படமாட்டாது.

  • img
  • வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்களுக்குச் சொந்தமான நூல்கள் மற்றும் இதழ்களை நூலகத்தில் கொண்டு வந்து படிக்க அனுமதி இல்லை.

  • img
  • தேவைப்படும் பகுதிகளை நகல் (Xerox) எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. போட்டோ, SCAN உள்ளிட்டவற்றை எடுக்க நூலகத்தாரிடம் அனுமதி பெற வேண்டும். தொலைபேசிகள் மூலம் நகல் எடுக்க அனுமதி இல்லை.

  • img
  • புத்தகங்கள் நல்லநிலையில் திருப்பித்தரப்பட வேண்டும். அடிக்கோடுகள், கிறுக்கல்கள் கூடாது. மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

  • img
  • புத்தகங்கள் பிறருக்கு மாற்றத்தக்கவை அல்ல.

  • img
  • படித்த நூல்களை மேசையின்மீது வைத்து விடவும்.